• Jun 18 2024

தமிழ் திரைப்படத்திற்கு டப்பிங் குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தமிழில் பிரபல நடிகரான தனுஷைக் காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இருவரும் பிரியப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

இவர்களின் அறிவிப்பானது பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருபினும் இதை எல்லாம் பொருட் படுத்தாது இருவரும் தமது கெரியரில் கவனம் செலுத்து வருகின்றனர். அத்தோடு தமது பிள்ளைகளுடன் இருவரும் நேரம் செலவழித்து வருகின்றனர்.

இவுரு் தற்போது ஒரு ஹிந்திப் படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

மேலும் இந்த நிலையில் தமிழ் படம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்து உள்ளதாக கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், டப்பிங் செய்யும்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஏற்கனவே வேறு தனுஷ் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த ரீமாசென் கேரக்டருக்கு ஐஸ்வர்யா பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement