• Jul 16 2024

விடாமுயற்சிக்கு ஒரு கும்பிடு போட சென்றாரா அஜித்? திருப்பதியில் கிடைத்த சர்ப்ரைஸ் கிப்ட்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் நடிகர் அஜித், தற்போது நடித்துவரும் திரைப்படம்தான் விடாமுயற்சி. இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.

விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க, இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் தான் அதிகம் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட கார் ரேஸ் வீடியோ ஒன்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து நடிகர் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.


மேலும் இந்த மாதத்தில் இறுதியில் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப்பட  படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் அஜித் தற்போது திருப்பதிக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். இதன்போது அஜித்தை கண்ட ரசிகர் ஒருவர் அவருக்கு பெருமாளின் சிலை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றனர் .


Advertisement

Advertisement