• Jun 26 2024

நான் சாகிற வரைக்கும் இருக்கும்-இந்த 4 பேரு மாதிரி தான் எல்லா ஆண்களும் இருக்கணும்; மைனா நந்தினி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் தான் மைனா நந்தினி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மைனா என்ற புனைப்பெயருடன் அனைவருக்கும் தெரியும் நபராக பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நந்தினி நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

ஆனால், மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இவரை பெரிதும் பாதிப்படைய வைத்தது.இதன் பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். இவர் இறுதியாக விக்ரம் படத்திலும் நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது பல விடயங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

என்னுடைய பெயர் நந்தினி தான் ஆனால் இப்பொழுது என்னை மைனா என்றே கூப்பிடுகிறார்கள்.அந்த பெயர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கின்றது.அத்தோடு பலரும் என்னை மைனா நந்தினி என்றே கூப்பிடுகிறார்கள்.நான் மிகவும் போல்ட் ஆனா பொண்ணு தான் .

கண்டிப்பா எனக்கு வயசு ஆனதால் பொறுப்பு ஆகிவிட்டது.கடந்து வந்த பாதையில் எனக்கு நிறை துக்கமும் இருக்கு மகிழ்ச்சியும் இருக்கு.நான் என்னுடைய வாழ்க்கையில் பல தவறுகளை செய்து இருக்கின்றேன்.இப்படி பல விடயங்கள் எனக்கு நடந்து இருக்கின்றது.பல பேர் பல விடயங்களை பற்றி பேசி இருக்கிறாங்க.அவங்கள் ஒவ்வொருத்தருக்கும் நான் போய் விளக்கம் கொடுத்திட்டு இருக்க முடியாது.அந்த நாலுபேருக்காகவும் நான் வாழ முடியாது.

எனக்காக அம்மா ,அப்பா, தம்பி என்னுடைய கணவர் என்னுடைய குழந்தை இருக்கு. அவங்கள் என்னை புரிஞ்சு கொண்டா போதும் .இவர்களை பற்றியே நான் யோசிக்க முடியும்.இந்த நெகட்டிவ்விட்டியை எறிஞ்சிட்டு போக வேண்டியது தான்.

அதாவது எனது தாய் தந்தையை நான் குழந்தை மாதிரி பார்க்கின்றேன். அவங்கள் மீது எப்போதும் மரியாதை இருக்கும் .அத்தோடு நான் சாகிற வரைக்கும் அவங்களை பார்த்துக்கொள்வேன்.என் பையன் என்னை நல்லா வச்சு செய்வான்.அவனால நான் இங்கிலீஸ் கற்றுக்கொண்டேன்.என் பிள்ளையால் பலதையும் கற்றுக்கொண்டு இருக்கின்றேன்.

இவ்வாறு பல விடயங்களை பகிர்ந்து கொண்ட மைனா இப்படிப்பட்ட நாலு ஆண்கள் இருந்தால் போதும் என்று கூறியுள்ளார்.அதாவது என் அப்பா ,தம்பி,கணவர் மற்றும் எனது மகன் போன்ற நாலு பேர் மாதிரி எல்லா ஆண்களும் இருந்தால் போதும்.என் அப்பா தம்பி என் கணவர் இந்த மூன்று பேரும் ஒரு பெண்ணைக்கூட தப்பா பார்த்ததே கிடையாது என பல விடயங்களை கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement