• Apr 03 2025

செல்பி எடுக்க, விடாமல் துரத்திய காவலாளி.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த நெகிழ்ச்சியான செயல்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை காவலாளி ஒருவர் செல்பி எடுக்க, விடாமல் துரத்திய நிலையில் அவர் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியானலால் சலாம்என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் இல்லை என்ற அளவில் வசூல் கிடைத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்ற நிலையில் அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள் முதல் மரியாதை அளித்த நிலையில் அவர் தரிசனம் செய்துவிட்டு வெளியே தன்னுடைய காரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கோவில் காவலாளி தனது மொபைல் போனுடன் ஐஸ்வர்யாவுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். முதலில் அந்த வேண்டுகோளை மறுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய காருக்குள் செல்ல முயன்ற போது விடாமல் அந்த காவலாளி துரத்தி வந்ததை பார்த்தவுடன் மனம் மாறி திடீரென அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

அந்த காவலாளி மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement