• Jan 15 2025

ராஷ்மிகாவை அடுத்து த்ரிஷாவுக்கு ஒரு ரூ.900 கோடி.. ஆனால் என்ன நடக்க போகுதோ?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா நடித்த ’அனிமல்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 900 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதை அடுத்து த்ரிஷாவுக்கு ஒரு 900 கோடி படம் ரெடி என சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வெளியான ’அனிமல்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் இந்த படம் கடுமையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டிக்கு திரை உலகை சேர்ந்தவர்களே கடுமையாக விமர்சனம் செய்தனர். நடிகை ராதிகா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் இயக்குநருக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ஆறு பிலிம்பேர் விருதுகளை பெற்றதோடு, சந்தீப் ரெட்டிக்கு தாதாசாகேப் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த  படமான ’ஸ்பிரிட்’ என்ற படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பிரபாஸ் உடன் மூன்று திரைப்படங்களில் த்ரிஷா நடித்துள்ள நிலையில் இது நான்காவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

’அனிமல்’ படத்தில் ராஷ்மிகாவுக்கு செம கிளாமரான காட்சிகள் இருந்த நிலையில் த்ரிஷாவை என்ன பாடு படுத்த போகிறாரோ இயக்குனர் என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த படம் த்ரிஷாவின் பாலிவுட் ரீஎண்ட்ரிக்கு உதவும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement