• Mar 28 2023

மனோரமாவுக்கு பிறகு அந்த காரெக்டரில் யாரும் நடிக்கல அது ஒன்று தான் குறை- எதிர் நீச்சல் நடிகை கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 1 week ago

Advertisement

Listen News!

 தமிழில் 70களில் இருந்து பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சத்யப்ரியா . இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளில் நடித்துள்ளார், தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டர்களில் நடித்தும் புகழ்பெற்றவர்.

மாமன் மகள், சூர்ய வம்சம், பாட்ஷா, பணக்காரன், அஞ்சலி என பல படங்களில் நடித்தவர் பாஷாவில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பார்.இந்நிலையில் பிரபல சேலுக்கு பிரத்தியாக பேட்டி கொடுத்திருக்கும் நடிகை சத்யபிரியா, “என்னதான் சீரியலில் நடித்து கொண்டிருந்தாலும், நாங்கள் எல்லாம் சினிமாவில் தோன்றி வந்தவர்கள். ஆனால் தற்போது சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தும் சினிமாவில் அம்மா கேரக்டர் என்பது குறைந்துவிட்டது.


 மறைந்த ஆச்சி மனோரமாவுக்கு பிறகு பாட்டி கேரக்டர் குறைந்து விட்டது. தற்போது அம்மா கேரக்டர்களும் பல திரைப்படங்களில் காண முடிவதில்லை. அது ஒன்றுதான் குறை!” என்று தற்கால சினிமாவில் வயதுமிக்கவர்களுக்கான கதாபாத்திர தட்டுப்பாடு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்,


இதனிடையே தற்போது திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை சத்யப்ரியா முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement