அம்மாவிடம் பேசிட்டு இருந்த நபருக்கு புதுபைக் வாங்கிக் கொடுத்த அஜித்- அதுவும் எப்படி நடந்திச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது நல்ல மனிதராகவும் வலம் வருபவர் தான் நடிகர் அஜித். முழு நேரமும் நடிப்பை மட்டுமே தொழிலாக வைத்துக் கொள்ளாது பைக் ரேசிங் கார் ரேசிங் போன்றவற்றிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.இது தவிர துப்பாக்குச் சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் நாடு முழுவதும் பைக் டூர் செல்ல வேண்டுமு் என ஆசையிலும் இருக்கின்றார். அந்த வகையில் இறுதியாக ஐரோப்பா முழுவதும் சுற்றுலா சென்று வந்தார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. தற்பொழுது மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இதனை அடுத்து அண்மையில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபற்றி ஆறு தங்கப் பதக்கங்களை வென்றார். இது தவிர எச். வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்திலும் நடித்து வருகின்றார். பொதுவாக இரக்க குணம் மிகுந்த இவர் பலருக்கும் எதவிகளைப் புரிந்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் தனது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் போது கேமரா மான் ஒருவர் தனது அம்மாவிடம் போனில் பேசிட்டிருந்தாராம். அம்மா நான் காசு சேர்த்திட்டு வருகின்றேன். இன்னும் கொஞ்ச நாள்ல பைக் வாங்கிடுவேன் என்று கூறினாராம்.

இதை எல்லாம் கேட்டிட்டு இருந்த அஜித் அன்றைய தினம் பின்னேரமே அந்த கேமராமான் ஆசைப்பட்ட புது பைக்கை வாங்கிக் கொடுத்திட்டாராம். அத்தோடு இந்த தகவலை யாருக்கும் சொல்லிடாதீங்க என்று கூறியும் அனுப்பி வைத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்