• May 09 2024

சிம்புவுடன் நடிக்க இருந்த அதிதி ஷங்கர் .. ஜஸ்ட் மிஸ் ஆனதால் இப்போது யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சிம்பு நடிக்க இருந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க ஒப்பந்தமான நிலையில் திடீரென சிம்பு அந்த படத்தில் இருந்து விலகி விட அதற்கு பதிலாக வேறொரு நடிகர் ஒப்பந்தமான நிலையில் தற்போது அவருக்கு ஜோடியாக தான் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற படம் உருவாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்ட  நிலையில் இந்த படத்தில் இருந்து திடீரென சிம்பு விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு தான் அவர் ’எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி கடந்த ஒரு வருடமாக அந்த படத்திற்காக காத்திருக்கிறார்.

இந்த நிலையில் ’கொரோனா குமார்’ படத்தில் டைட்டில் ’வைப் குமார்’ என மாற்றப்பட்டதை அடுத்து அந்த படத்தில் சிம்புவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகி ஆக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

திட்டமிட்டபடி இந்த படத்தில் நாயகனாக சிம்பு நடித்திருந்தால் சிம்பு ஜோடியாக தான் அதிதி ஷங்கர் நடித்திருப்பார் என்றும் ஜஸ்ட் மிஸ் ஆனதை அடுத்து அவர் தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கார்த்தி நடித்த ‘விருமன்’, சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ ஆகிய படங்களை அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வரும் நிலையில் அவரது நான்காவது படமாக ’வைப் குமார்’ உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement