• Apr 28 2024

அடேங்கப்பா.. 'ராஜா ராணி 2' சீரியல் நடிகர் சித்து.. இந்தப் படங்களில் எல்லாம் நடித்திருக்கிறாரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் 'ராஜா ராணி 2'. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'திருமணம்' எனும் சீரியலில் ஹீரோவாக நடித்த சித்து தான் இந்த சீரியலிலும் ஹீரோவாக நடித்து வருகின்றார். 


மேலும் சீரியலில் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் சித்து சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் நடித்திருக்கின்றார் என்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது.

அந்தவகையில் தமிழில் வெளிவந்த 'வல்லினம்' என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமன்றி 'குற்றம் கடிதல், பீச்சாங்கை, அகோரி' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் சித்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் சித்து வல்லினம் திரைப்படத்தில் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement