• Sep 08 2024

விக்ரம் படம் பற்றி அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் அறிவித்துள்ள தகவல் -குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 3-ஆம் திகதி வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம் தான் விக்ரம். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படம், உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது. கைதி, மாஸ்டர் போன்ற போன்ற ஹிட் படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

படம் வெளியாகி 2 நாட்களில் 65 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது. இந்நிலையில் முதல் வாரக் கடைசியை கடந்துள்ள நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் வார இறுதியில் முதல் 5 படங்களுக்கு விக்ரம் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.இது சம்மந்தமான பட விநியோக நிறுவனமான ப்ரைம் மீடியா பிலிம்ஸ் இதுவரை விக்ரம் திரைப்படம் 15 லடசம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.இது இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய்க்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் வெளியான தமிழ் திரைப்படங்களின் வசூலில் விக்ரம் படம் முதலிடத்தில் உள்ளதாக ப்ரைம் மீடியா நிறுவனம் டுவிட்டரில் அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement