• Jan 18 2025

கமல் பட நடிகை பூஜாகுமார் மகளா இவர்? இப்படி வளர்ந்துட்டாரே?

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!


 அமெரிக்காவை சேர்ந்த பூஜா குமார் கமல்ஹாசனின் சில படங்களில் நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில்  நேற்று பூஜா குமார் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் உள்ள பூஜா குமாரின் மகளை பார்த்து அதற்குள் பூஜா குமாரின் மகள் இப்படி வளர்ந்து விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.  

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பூஜாகுமார் கடந்த 2000 ஆண்டு ’காதல் ரோஜாவே’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பல ஆங்கில படங்களில் நடித்த பூஜாகுமார், கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆனார்.

‘விஸ்வரூபம்’ ’விஸ்வரூபம் 2’ ’உத்தம வில்லன்’ ’மீன் குழம்பும் மண் பானையும்’ போன்ற படங்களில் நடித்த அவர்,  கடந்த 1999 ஆம் ஆண்டு விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தற்போது பூஜாகுமாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட  நிலையில் தனது கணவர் மற்றும்  மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து பூஜா குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள், உங்கள் மகள் வேகமாக வளர்ந்து வருகிறார், விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பாரா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement