• Jan 18 2025

தனக்கு சேரி மொழி தெரியாது... சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பூ... மன்னிப்புக்கு கேட்ட வேண்டும் கோபத்தில் கொந்தளித்த மக்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு அண்மையில் நடிகை திரிஷா பற்றி மன்சூர் அலிகான் அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, தேசிய மகளிர் ஆணையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்து உடனடி நடவடிக்கையும் எடுத்தார். இதையடுத்து, திரிஷா விவகாரத்தில் இவ்வளவு அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கும் நீங்கள் ஏன் மணிப்பூரில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தீர்கள் என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.


இதற்கு பதிலளித்த குஷ்பு, உங்களைப்போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது. என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கண்விழித்து பாருங்க என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் நடிகை குஷ்பு சேரி மொழி என பயன்படுத்தி இருந்தது சர்ச்சையில் சிக்கியது. அவர் அவ்வாறு பதிவிட்டதற்கு கண்டனங்களும் குவிந்தன. இதற்காக நடிகை குஷ்பு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருந்தார்.


தற்போது நடிகை குஷ்பூ மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் அந்த பதவியில் இருந்தும் விலக வேண்டும் , பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வேண்டும் என நெட்டிசன்கள் உட்பட மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement