• Jan 19 2025

குழந்தை பிறந்த சில நாட்களில் அமலாபால் வீட்டில் இன்னொரு விசேஷம்.. க்யூட் புகைப்படங்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை அமலா பால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அவரது வீட்டில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது அவரது வீட்டில் இன்னொரு விசேஷம் கொண்டாடப்படுவதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ், மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அமலா பால், தேசாய் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு இலை என்ற பெயர் வைத்துள்ளதாகவும் இந்த பெயர் கிறிஸ்துவ மதத்தின் புகழ்பெற்ற பெயர் என்றும் கூறப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி குழந்தையுடன் வீடு திரும்பும் அமலாபால் புகைப்படங்கள் மற்றும் சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகின

இந்த நிலையில் இன்று அமலா பால் கணவர் தேசாய் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அமலா பால் ’எங்கள் பிறந்த நாள் திட்டங்கள் மாறி இருந்தாலும், திரைப்பட விளம்பரங்களுக்காக எங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டாலும், எங்கள் பயணத்தில் நாங்கள் எப்போதும் ஒன்றாக செல்கிறோம்.

உங்கள் கரம் எனக்குள் இருப்பதற்கு நான் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் உழைப்பின் மூலம் ஒவ்வொரு படிக்கட்டாக உயர்ந்து கொண்டிருக்கும்போது நான் உங்கள் பக்கத்தில் இருப்பேன் என்பதை உறுதி அளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement