• May 19 2024

நடிகர் விஜய் படத்தை தயாரிக்கும் டோனி...?இந்த முறை மிஸ் ஆகாது

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம், அடுத்தாண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

இதனை அடுத்து இவரின் அடுத்த படமான தளபதி 67 ஐ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதோடு அனிரூத் இசையமைக்கவுள்ளார். இதனை அடுத்து தளபதி 68 படத்தை  இயக்குநர் அட்லி இயக்குவார் என்றும் , ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளியாகியிருந்தது

இந்த நிலையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.அதாவது ‘தளபதி 69’ அல்லது ‘தளபதி 70’ திரைப்படத்தை CSK ரசிகர்களுக்கு மிகவும் பிரியமான, தல என்று அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தான் தயாரிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு தகவலின்படி, தல தோனி மற்றும் விஜய் ஏற்கனவே நண்பர்கள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக விஜய் படத்தை தோனி தயாரிக்கிறார் என்ற தகவல் பரவி வரும் நிலையில், அநேகமாக தளபதி விஜய்யின் 70-வது படத்தை தான் தோனி தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. 

ஏன்னென்றால், தோனியின் ராசி நம்பர் 7 என்பதால் ஒருவேளை அப்படியாக இருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement