• May 08 2024

முதலிரவு காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்து ரசிகர்களை அசர வைத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை ஐஸ்ர்யா தாத்தா. இவர் தற்பொழுது இயக்குநர் நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் மிளிர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். 


இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குநரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார். 


கதாநாயகியை மையப்படுத்திய இந்த படம் ரொமான்டிக், ஆக்ஷன், த்ரில்லர் கலந்த படமாக உருவாகி வருகிறது.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் நடந்து முடிந்தது. 


இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வெளியாகியுள்ளது. 


இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தா கதாநாயகனுடன் மிகவும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் மிகவும் அழுக்கான உடைகளுடனுன், ரொமான்டிக் போர்ஷனிலும் நடித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement