• Sep 20 2024

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் -இடைக்கால தடை மீண்டும் நீட்டிப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

'புலி' படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை.

வருமான வரித்துறை ரெய்டு நடத்திய ஆவணத்தில் புலி படம் வருமானத்தை மறைத்ததாக தாமதமாக அபராதம் விதித்ததாக விஜய் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.

உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில் இடைக்கால தடையை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக தெரிவித்திருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.



மேலும் அந்த ஆவணங்களை ஒப்பிட்டதில் புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. 

தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்தோடு அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019 ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.



மேலும் இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் கடந்த மாதம் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16-க்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கில் விஜய் தரப்பில், "வரி ஏய்ப்பு செய்திருந்தால் அதற்கு அபராதத் தொகையை உடனேயே பிறப்பிக்காமல் 3 ஆண்டுகள் கழித்து காலம் தாழ்த்தி பிறப்பித்துள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டு இன்று விசாரணைக்கு வந்தது. அத்தோடு இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைத்தார். விஜய் மீதான வருமான வரித்துறை அபராதம் விதித்திருந்தது மீதான இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement