" நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று மனஅழுத்தம் காரணமாக தூங்கிட்டுதற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி கேள்விபட்டிருப்பீர்கள். இந்த டீனேஜ் வயதில் இவ்வாறு அவர்கள் செய்வதற்கான காரணம் என்ன? '' என்று ஊடகவியலார் கேட்ட கேள்விக்கு சைக்கோலஜி டொக்டர் அபிலாஷா பதிலளித்துள்ளார்.
விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இக்காலகட்டத்தில் இளைஞர் சமுதாயம் பலவகையான இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அதில் ஒன்று உடல் அமைப்பு முன்னைய காலத்தில் அதுதொடர்பான கருத்துக்களுக்கு பெரிதாக ரியாக் பண்ணுவது இல்லை ஆனால் தற்போது பாடசாலைகளில் மாணவர்களிடையே அதுதொடர்பான கருத்துமுரண்பாடுகள் இடம்பெறுகிறது.
மற்றைய விடயம் நாங்கள் ஏதாவது அவர்கள் கேட்கும் போது இல்லை என்று சொல்லும் போது உடனே கோபம் வருகிறது, தன்னை யாருக்கும் பிடிக்கவிலையில் என்று நினைத்துக்கொள்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய ஒரு பாடம் '' வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரும் அதை
எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் , எப்படி கடந்து செல்லவேண்டும் என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
மற்றய விடயம் தற்போது செல்போன் , லேப்டாப் போன்றவற்றிட்ட்கு அடிமையாகி விட்டார்கள். சோசியல் மீடியவிற்கு அடிமையாகி விட்டார்கள்.அதில் அவர்கள் பார்ப்பது நல்லதா , கெட்டதா தொடர்பான விளக்கம் அவர்களுக்கு இருக்காது. அது தொடர்பாக கண்காணிக்கும் போது அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இதனை தாண்டி பாடசாலையில் அவர்கள் எடுக்கும் மார்க்ஸ், அதுமட்டுமே வாழ்க்கை இல்ல , எல்லா மாணவர்களையும் சகஉணர்வோடு பார்க்காமை , இப்படி சில சிறிய விஷயங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளல். அதிலும் தாண்டி வாலிப பருவத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை எப்படி தாண்டி வருவது என்ற விளக்கம் சிறார்கள் இடத்தில் இல்லை என்று டாகடர் அபிலாஷா அவர்கள் கூறுகிறார்.
இப்படியான விடயங்கள் இருக்கவே மனஉளைச்சலில் பிள்ளைகள் இன்னும் ஆழமான யோசனைகளுக்குள் தள்ளுவதற்கு காரணம் தனிமை. அவர்களுக்கென தனியான அறை. பெற்றோரோடு இருக்கும் போது அவர்களின் தேவையை புரிந்து செய்யலாம். தனியாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் செயல்கள், தேவைகள், என்பன கண்காணிக்கப்படாமல் அவர்கள் அதே யோசனையில் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர்.
அவர்களிடம் இணக்கமாக இருந்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு தெரிந்து அவர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என் சைக்கோலஜி டாகடர் அபிலாஷா மருத்துவ ரீதியாகவும் , மனவியல் ரீதியாகவும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Listen News!