• Oct 09 2024

Meera-வ குழந்தையில இருந்து பார்த்திருக்கேன்,ரொம்ப கஷ்டமாக இருக்கு- நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் ஏடிகே

stella / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை 3 மணி அளவில்,தனது ரூமில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் தொங்கியதைப் பார்த்து பதறிப்போன விஜய் ஆண்டனி. 

வீட்டு பணியாளர்களின் உதவியுடன் அவரை அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்தார்.மீராவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இதனை அடுத்து,மீராவின் உடல் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்தூறு ஆய்வுகள் முடிந்து தற்போது உடல் டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனி இல்லத்தில் இறுதி சடங்குக்கான ஏற்பாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீராவின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி லுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் பிரபலமும் ராப் பாடகருமான ஏடிகேயும் தனது அஞ்சலியை செலுத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, மீராவை எனக்கு அளுடைய மூன்று வயசில இருந்து தெரியும்.


இப்படியான ஒரு நிலையில் விஜய் ஆண்டனி சேர் வீட்டை வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.அப்படியான இறப்பு எதற்கும் முடிவில்லை.அவங்க போய்டுவாங்க அவங்க குடும்பம் எவ்வளவு கஷ்டப்படப் போறாங்க என்று அவங்களுக்கு தான் தெரியும். நம்ம உயிரை நாமளே பறிச்சுக் கொள்ளுவது என்பது எந்தப் பிரச்சினைக்குமான முடிவில்லை. விஜய் அண்டனி சேரின் குடும்பத்திற்கு தன்னுடைய இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.



Advertisement