• Sep 20 2024

பிக் பாஸ் ஆரவ் வீட்டில் கொண்டாட்டம்... தனது குழந்தையுடன் புகைப்படம் வெளியிட நடிகர்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு பின் "மார்க்கெட் ராஜா" மற்றும் "ராஜபீமா" போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது  தனக்கு குழந்தை பிறந்துள்ளது என சமூகவலை தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 


நடிகர் உதயநிதி ஹீரோவாக நடித்து வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் நடிகர் ஆரவ் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மீண்டு மகிழ் திருமேனி இயக்கும் "விடாமுயற்ச்சி" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 


நடிகர் ஆரவ் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை raahai என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ஆரவ் மற்றும் Raahei ஜோடிக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் ஆரவ் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement