• Oct 30 2024

பிரபல நடிகையுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த நடிகர் புகழ்- இவரும் வைல்ட்காட் என்ட்ரியாக வந்துள்ளாரா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது 42ம் நாளை எட்டி இருக்கிறது. சனிக்கிழமை எபிசோடு முழுவதும் கமல் பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு பற்றி தான் அதிகம் பேசி இருந்தார்.அதனை தொடர்ந்து நேற்றைய எபிசோடில் கமல் மற்ற போட்டியாளர்களின் பிரச்சனைகள் பற்றி பேசி இருந்தார்.

பல போட்டியாளர்கள் கெட்ட வார்த்தை மற்றும் 18+ ஆக பேசுவதால் கமல் அதை கண்டித்து இருக்கிறார். பெயர் குறிப்பிடாமல் அவர் ஒட்டு மொத்த போட்டியாளார்களையும் அவர் எச்சரித்து இருக்கிறார்."இது பிக் பாஸ் ஷோவாகவே இருக்க வேண்டும், பீப் பாஸ் ஷோவாக மாற கூடாது" என அவர் எச்சரித்து இருக்கிறார்.


தொடர்ந்து ஐஸ்வர்யா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இவர் எலிமினேட் ஆனது பொறுக்க முடியாமல் நிக்சன் கண்ணீர் வடித்திருந்தார். அத்தோடு 7ம் வாரத் தலைவராக தினேஷ் தேர்வாகியுள்ளார். இதனால் இவர் இந்த வாரம் ஏதாவது மாற்றங்கள் செய்வார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது.

இது ஒரு புறம் பிக்பாஸ் வீட்டிற்குள் புகழ் மற்றும் நடிகை சிருஷ்டி டாங்கே ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.இவர்கள் இருவரும் லிவிங் ஏரியாவில் உட்கார்ந்து இருப்பது ப்ரோமோவின் போது வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement