• Oct 22 2024

விபத்தில் சிக்கிய அபியும் சுடரும்- வெற்றிக்கு தெரிய வருமா உண்மைகள்? எதிர்பாராத திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் வெற்றி தன்னுடைய குழந்தை தான் சுடர் என்பது தெரியாமல் பழகி வருகின்றார். வெற்றி சுடருடன் பழகி வருவது அபிக்கும் தெரியாது.இந்த உண்மை அபிக்கு தெரிந்தால் அபி என்ன முடிவு எடுப்பார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

அத்தோடு சுடர் தான் தன்னுடைய வாழ்க்கை என நினைத்து வெற்றி குடிப்பதை எல்லாம் விட்டு விட்டார். அந்த நிலையில் அபி தன்னுடன் காரில் சுடரை ஏற்றிச் செல்லும் போது கார் விபத்துக்குள்ளாகி விட்டது. இதனை வெற்றியின் சித்தப்பு வந்து வெற்றியிடம் சொல்கின்றார்.

இதனால் வெற்றிக்கு சுடர் தான் தன்னுடைய மகள் என்பது தெரிய வருமா? அல்லது சுடர் வெற்றியுடன் பழகுவது அபிக்கு தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.


Advertisement