• May 20 2024

முன்னணி ஹீரோவால் கைவிடப்படப்பட்ட இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்- 26 ஆண்டுகளுக்குப் பிறகு கை கொடுக்கும் சூப்பர் ஸ்டார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் தான் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய தர்பார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதோடு தோல்வியையும் சந்தித்தது.

இதற்கு முன்னதாக இவர் தளபதி விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார்.

ஆனால் தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்ததாலும் சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார் என்று சொல்லப்படுகிறது.

அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்து இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம். இந்நிலையில் பாலிவுட்டில் கஜினி வெற்றியால் அவருக்கு நல்ல அறிமுகம் உள்ள நிலையில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement