• May 15 2024

முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நடிகர் சூர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.இதில் தமிழின் 3 படங்கள் மற்றும் அதன் கலைஞர்கள் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளனர். குறிப்பாக சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றது.

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இசை என்ற 5 பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இதனையடுத்து நாம ஜெயிச்சிட்டோம் மாறா என்ற கோஷத்தை படக்குழுவினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் ட்ரெண்டாக்கி சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.

கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக வெளியான இந்தப் படத்தை சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் இயக்கியிருந்தார் இயக்குநர் சுதா கொங்கரா.இன்றைய தினம் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்துள்ளது.

சூர்யாவின் பிறந்தநாள் மற்றும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு வாழ்த்துமழையை திரையுலகத்தினர் தொடர்ந்து பொழிந்து வருகின்றனர்.

இதனிடையே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ள நடிகர் சூர்யா, இன்றைய தினம் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். முன்னதாக முதல்வர் உள்ளிட்டவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா, நேரில் சென்று முதல்வரை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement