• May 09 2024

என்ன கருமம்டா இதெல்லாம்- ரண்வீரைத் தொடர்ந்து நிர்வாணமாக போட்டோ ஷுட் நடத்திய விஷ்ணு விஷால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் நடிகரான ரன்வீர் சிங் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் நிர்வாணமாக போட்டோஷுட் நடத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியிருந்தார். பேப்பர் மேகஸினுக்காக அவர் இப்படியொரு போட்டோஷூட்டை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இவரைப் போலவே நடிகர் விஷ்ணு விஷாலும் உள்ளாடை கூட அணியாமல் படுக்கையில் படுத்தபடி மோசமான போட்டோஷூட்டை நடத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனால் இவருடைய ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிலும் பெட்ஷிட்டை வைத்து அதை மட்டும் மறைத்தபடி ரொம்பவே கொடூரமாக போஸ் கொடுத்து ஆபாசத்தின் உச்சிக்கே சென்று விட்டார். விஜய் தேவரகொண்டா மற்றும் ரண்வீர் என சமீபத்தில் பலரும் நிர்வாணமாக போட்டோக்களை போடுவதை டிரெண்ட் ஆக்கி வரும் நிலையில், அந்த டிரெண்டிங்கில் தானும் இணைந்து விட்டேன் என விஷ்ணு விஷால் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கேப்ஷன் கொடுத்திருப்பது ரசிகர்களை உச்சகட்ட கோபத்திற்கு ஆழ்த்தி உள்ளது.

இதனால் கடுப்பான ரசிகர்கள் என்ன கருமம்டா இதெல்லாம் என ஏகப்பட்ட ட்ரொல் மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் இப்படி போல்டாக போட்டோஷூட் நடத்தியதை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement