• Jul 03 2024

அமீர் - பாவ்னிக்கு தகுதியில்லை- ரம்யா கிருஷ்னணுக்கு உண்மையை உடைத்த தாமரை !

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அதில் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பாக ஆரம்பமாகும் . அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 ஒளிப்பரப்பாகி வருகின்றது.

இவ்வாறு இருக்கையில் கடந்த ஆண்டு பிபி ஜோடிகள் முதல் சீசன் ஒளிப்பரப்பானது. இதில் ஷாரிக் - அனிதா ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக இருந்தார்கள்.

மேலும் இதன் தொடர்ச்சியாக தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இந்த முறை நடுவராக உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அதிகப்படியான ரசிகர்களை பெற்றுள்ள ஜோடி என்றால் அது அமீர் - பாவ்னி. பிக் பாஸ் சீசன் 5ல் இந்த ஜோடிக்கு கிடைத்த ரீச்சை வைத்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இருவரையும் ஜோடியாக களம் இறக்கியது விஜய் டிவி. மேலும் இருவரும் நடனத்தில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லை இருவருவரின் நெருக்கமும் அதிகமாகி வருகிறது.

போன வார எபிசோடில் காதல் சுற்றில் மோதிரத்துடன் பாவ்னிக்கு அமீர் மிகப் பெரிய சர்ப்ரைஸூம் தந்து விட்டார். அமீர் காதலை ஏற்றுக் கொள்ள பாவ்னி கொஞ்சம் நேரமும் கேட்டு இருக்கிறார்.

இந்த விஷயம் சின்னத்திரையில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த வார எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. மேலும் இதில் வழக்கம் போல் வித்தியாசமான கேம் ஒன்று வைக்கப்படுகிறது. அதாவது பிபி ஜோடிகள் ஃபைனல்ஸூக்கு செல்ல தகுதியானவர்கள் யார்? யாருக்கு தகுதி இல்லையென கூறி அவர்கள் முகத்தில் கலர் பூச வேண்டும்.

மேலும் இந்த டாஸ்கில் தாமரை செல்வி , அமீர் - பாவ்னிக்கு அந்த தகுதி இல்லை என கூறுகிறார். அதற்கு அவர் என்ன காரணம் விளக்கமாக கூறுகிறார் என்று தெரியவில்லை. உடனே நடுவர் ரம்யா கிருஷ்ணன், அதற்கு ஸ்மார்ட் மூவ் தாமரை என வாழ்த்துகிறார். ஆனால் தாமரை செயலால் அமீர் - பாவ்னி முகம் மாறுகிறது. அத்தோடு இதை பார்த்த ரசிகர்கள், தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவற்றை மனதில் கொண்டு தான் இவ்வாறு நடந்து கொள்வதாக கமெண்டில் கூறி வருகின்றனர். இந்த ப்ரமோவை பார்த்ததும் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement