• Oct 09 2024

கரிகாலனைத் திட்டும் விசாலாட்சி.. வெண்பாவால் கண் கலங்கிய ஈஸ்வரி.. ஆதி குணசேகரன் இல்லாமலே தொடரும் 'எதிர்நீச்சல்' சீரியல்.. வெளியானது அடுத்த ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் கரிகாலனைப் பார்த்து விசாலாட்சி "என்னடா பார்க்குறா" எனக் கேட்கிறார். பதிலுக்கு கரிகாலன் "பொம்பளைகளுக்கு பிரசாதம் என்னீங்களே" என்கிறார். அதற்கு விசாலாட்சி அதைப் பார்க்குற உன் கண்ணு அவிஞ்சு போய்டும், அப்புறம் நீ ஆசைப் படுறியே உனக்குப் பொண்ணு என்று, கண்ணு தெரியாத கபோயாய் தான் அங்க போகணும்" என்கிறார். பதிலுக்கு கரிகாலன் "இல்ல இல்ல ஹனிமூனுக்கு கண்ணு தான் முக்கியம்" என்கிறார்.


மறுபுறம் ஈஸ்வரி, மகன், ஜீவானந்தம், வெண்பா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவானந்தம் "கஷ்டத்தில இருக்கிறது வெண்பா தான், அது என்னால ஏற்பட்டது" என்கிறார். பதிலுக்கு வெண்பா "நீங்க என்னை நல்லா பார்த்துக்கிறீங்க, என்ன அம்மா மட்டும் நம்ம கூட இல்லை" என்கிறார். இதைக் கேட்டதும் ஈஸ்வரியின் கண்கள் கலங்குகின்றன. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


மேலும் இந்தப் ப்ரோமோ வீடியோவிலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இடம்பெறவில்லை, இதனைப் பார்த்த ரசிகர்கள் "மாரிமுத்து இல்லாமல் சீரியல் பார்ப்பதில் இருந்த சுவாரஷ்யம் குறைந்து விட்டதாக கூறி வருகின்றனர்.  


Advertisement