தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகரும் ஒருவர். இவர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
மேலும் கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இந்த ஜோடி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்தனர். மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டமையை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் இவர்கள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தவாறே இருக்கின்றார். அந்தவகையில் "வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா" என்று மகாலட்சுமியைக் குத்திக் காட்டிப் பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமோர் விமர்சனத்தையும் முன் வைத்திருக்கின்றார். அதாவது ரவீந்தர் கைது செய்யபட்டதற்கு மகாலட்சுமியை கட்டிக்கொண்டது தான் முக்கிய காரணம் எனவும், அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்பட்டா என்ன நிகழும் என்பதற்கு மகாலட்சுமி ஒரு எடுத்துக்காட்டு, ரவீந்தரை பணத்தாசையில் தான் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்' எனவும் தெரிவித்துள்ளார்.
இவரின் கருத்துக்கள் பலரையும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது. எனவே "ரவீந்தர் செய்த தப்புக்கு தான் அவருக்கு தண்டனை கிடைச்சிருக்கு, பாவம் மகாலட்சுமி என்ன பண்ணுவ" எனக்கேட்டு வருகின்றனர்.
Listen News!