• Sep 20 2024

திடீர் திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல்-பரபரப்புடன் வெளியான ப்ரமோ இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கு மட்டுமல்லாது சீரியல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அத்தோடு ரி ஆர் பியிலும் இந்த சீரியல்கள் முன்னணியில் காணப்படுகின்றன.

அந்த வகையில் இதில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌனராகம் ,ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும் போன்ற சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதில் தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இதில் கதாநாயகனாக வினோத்பாபுவும் கதாநாயகியாக பவித்ராவும் நடித்து வருகின்றனர்.

எதிர்பாராத விதமாக திருமணத்தில் இணைந்த இவர்கள் தற்பொழுது பிரிந்து விட்டனர். அத்தோடு இருவருக்கும் வெவ்வேறு திருமண ஏற்பாடும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் வெற்றி வந்து தன்னை அழைத்துச் செல்வான் என அபி காத்திருக்கின்றார்.

இந்நிலையில் அபியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் அந்த திருமணத்தை வெற்றி நிறுத்துங்கள் எனக் கூறி அபி மீது இருக்கும் காதலை சொல்ல அபியும் தனது மாலையை கழட்டி வெற்றி தான் என் புருஷன் என கத்தி சொல்லி கட்டியணைக்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement