• Nov 06 2024

ஜிவி பிரகாஷ் போட்ட ஒரு போட்டோ.. சும்மா எக்கச்சக்க லைக்குகளை அள்ளுது..!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும் நடிகருமான திகழும்  ஜீவி பிரகாஷ், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆன்வி என்ற இரண்டு வயதில்  பெண் குழந்தையும் உள்ளது.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி இருவருமே காதலுக்கு சின்னமாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இதை தொடர்ந்து இருவருமே தமது சமூக வலைத்தள பக்கத்தில் அதற்கு விளக்கம் கொடுத்து தமது விருப்பப்படியே பிரிவதாகவும் தெரிவித்திருந்தார்கள். இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து ஜிவி பிரகாஷ் தனது கேரியரில் கவனம் கட்டி வருகின்றார். இவரது நடிப்பில் வெளியான ரெபெல், கள்வன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.


இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் தற்போது இயக்குநர் பாரதிராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து  வருகின்றார்கள்.

இறுதியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான கள்வன்  திரைப்படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில்  நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement