• Aug 20 2026

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலுக்கு திடீர் நேரம் மாற்றம்..?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி மவுசு காணப்படுகின்றது. அதிலும் மிக முக்கியமாக விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றன.

இந்த சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை மட்டும் இன்றி பல நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பாகி வருகின்றன. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல், பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 ஆகிய சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் முன்னிலை பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அதேபோலவே சன் டிவி சீரியலிலும் இதுவரை டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்று வந்த சிங்கப்பெண்ணே சீரியல் சற்று சரிந்த நிலையில், கயல் சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தாலே இனிக்கும் மற்றும் மாரி போன்ற பல சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் அடிமைகளாக காணப்படுகின்றார்கள்.


இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாரி சீரியல் சிறிய நேரமாற்றத்துடன் ஒளிபரப்பாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மாரி சீரியல் தெய்வ அம்சம் நிறைந்த கிராமத்து கதையோடு மட்டுமல்லாமல் இதில் ஆவி, பாம்பு, மோகினி, ஐயப்பன் என பல கேரக்டர்கள் காணப்படுவதனால் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement