• Jan 19 2025

எல்லாம் பேஷா போயிட்டு இருக்கு... பாக்கியாவுக்கு ஜெனி சொன்ன சீக்ரெட்? எழிலிடம் சான்ஸ் கேட்ட கதிர்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம்... அதில், பாண்டியனுடன் தமது வீட்டு கல்யாணத்தைப் பற்றி பெருமையாக பேசிக் கொள்கிறார் ராதிகாவின் பெரிய அண்ணா. இடையில் கோபி என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றார்.


மறுபக்கம், கோமதியும், மீனாவும் பேசிக் கொண்டு இருக்க, அங்கு பாக்கியா வந்து ஸ்வீட் கொடுக்கிறார். அப்போது, மீனா தனக்கு பேசியதாகவும், உங்க கூட கதைக்க வேணாம் என்று சொன்னதாகவும் மாட்டி விடுகிறார் கோமதி. அதற்கு பாக்கியா, நாங்களும் நல்லவங்க தான். உன் அத்தையை ஒன்னும் பண்ண மாட்டன் என்று சொல்லிச் செல்கிறார்.


இதை தொடர்ந்து, ஹோட்டலுக்கு எழில் சாப்பிட செல்ல, அங்கு கதிர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். இதன் போது இருவரும் பேசிக் கொண்டு உள்ளார்கள். எழில் தான் டைரக்டர் என்று சொல்ல, அவர் ஆச்சரியப்படுகிறார். தனக்கும் படத்தில் நடிக்க ஒரு சான்ஸ் தருமாறு எழிலிடம் கேட்க, கண்டிப்பா தாரேன் என சொல்லுகிறார்.


கோமதியும் மீனாவும் கோவிலுக்கு சென்று அர்ச்சனை தட்டு வாங்க காசு மாற்றுவதற்கு கடைக்கு செல்ல, அங்கு பாக்கியாவும் அமிர்தாவும் வருகிறார்கள். பாக்கியா இருவருக்கும் சேர்த்து அர்ச்சனை தட்டு வாங்குமாறு சொல்ல, அமிர்தாவும் மீனாவும் வாங்க செல்கின்றார்கள். கோமதி கண்டிப்பா காச தருவன் என சொல்லுகிறார். பின்பு நால்வரும் சேர்ந்து கோவிலுக்கு செல்கின்றார்கள்.


செழியன் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கான கார்டை பார்த்து அழுது கொண்டு இருக்க, ஈஸ்வரி வந்து ஆறுதல் சொல்லுகிறார்.


பாக்கியா சமையல் செய்ய ஆரம்பிக்க, வழமை போல மினிஸ்டர் அனுப்பிய ஆளுகள் எல்லாம் சொதப்பலாக செய்கின்றார்கள். அப்போது ஜெனி பாக்கியாவுக்கு கோல் பண்ணி, பாப்பாவுக்கு 


பங்க்ஷன் வச்சு இருக்கு, எல்லாம் அப்பாட ஏற்பாடு தான், நீங்க அதுல இல்ல எனும் போது கஷ்டமா இருக்கு என அழுகிறார். அதற்கு பாக்கியா ஆறுதல் சொல்லி வைக்கிறார்.


ராதிகாவும், கோபியும் ராஜிக்கு நடக்க இருக்கும் கல்யாணம், சீதனம் பற்றி அனைவருடனும் அமர்ந்து கதைக்கின்றார். ராஜிக்கு கண்ணன் போன் செய்து வீட்டை விட்டு போவதற்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு என சொல்கிறார். அப்பாவா? காதலா? என குழம்பிய நிலையில் ராஜி அழுகிறார்.


பாக்கியா மினிஸ்டர் அனுப்பிய பெண்களிடம் பருப்பு கறி செய்ய சொல்ல, அவர்கள் மாறி மாறி உப்பை போட்டு வைக்கின்றார்கள். இதை பார்த்து பாக்கியா தலையில் அடித்துக் கொள்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement