• Jan 19 2025

மைக் மோகனுக்கு எயிட்ஸா? வீடு தேடிப்போய் வாங்கிக்கட்டிய செய்தியாளர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

80ம் ஆண்டுகளில் படு பேமஸ் ஆக திகழ்ந்தவர் தான் நடிகர் மோகன். இவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அத்தனையுமே மெகா ஹிட் அடைந்தது. இதனாலே அவர் மைக் மோகன் என அழைக்கப்பட்டார். எனினும் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். ஆனாலும் தற்போது ஹாரா, கோட் படங்களில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஹாரா  படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் எடுக்கப்பேட்டியில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

அதாவது எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்து விட்டதாக 90 ஆம் ஆண்டுகளில் சொன்னார்கள். அந்த செய்தியை கேட்டு எனது ரசிகர்கள் மட்டுமின்றி வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் ரசிகர்கள் பதட்டமடைந்து வீடு வரை வந்து பார்த்தார்கள்.


இதன்போது, என்னை ஒருவர் பேட்டி எடுக்க வந்தார். அப்போது அவர் என்னிடம் உங்களுக்கு எயிட்ஸ் இல்லை என சொல்லுங்க சார் என்று கேட்டார்.

உடனே நான் டேய் இது என்னடா போங்கா இருக்கேடா.. நீங்க எனக்கு எயிட்ஸ் இருக்கு என்று சொல்லுவீங்க. நான் இல்லைன்னு சொல்லனுமா? என்று கேட்டேன். இதிலும் நான் ஒரு ட்ரெண்ட் செட்டராகத்தான் இருந்திருக்கிறேன். எய்ட்ஸ் இருந்துச்சா இல்லையா என்று என்னைத் தவிர எனது நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியும். எனக்கு இருந்தால் தானே நான் பீல் பண்ண. அதனால எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை என்று சொல்லி உள்ளார் நடிகர் மோகன்.

Advertisement

Advertisement