• Jul 27 2024

நடிகர் சித்தார்த்தை பார்த்து ‘மிஸ் யூ’ சொன்ன சிவகார்த்திகேயன்.. இதுதான் காரணம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் சித்தார்த்தை பார்த்து ’மிஸ் யூ’ என்று பதிவு செய்துள்ள ட்வீட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த் நடித்த ’சித்தா’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இதனை அடுத்து ’இந்தியன் 2’ உட்பட சில படங்களில் நடித்துள்ள நிலையில் மூன்று புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் அவருடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் சிவகார்த்திகேயன், சித்தார்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் ’மிஸ் யூ’ என்று வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜசேகர் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது அருமை சகோதரர் சித்தார்த்தின் ’மிஸ் யூ’திரைப்படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவருக்கும் இந்த படத்தின் குழுவினர்களுக்கும் இந்த படம் வெற்றி படமாக அமையட்டும் என்றும் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சித்தார்த் ஜோடியாக சஷ்டிகா ராஜேந்திரன் என்பவர் நடிக்கும் இந்த படத்தில் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Advertisement

Advertisement