• Apr 30 2024

அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பிரபல நடிகை..அவர் யார் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


அதுமட்டுமல்லாமல் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.


இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.மேலும் இவர் நடிப்பில் தற்போது கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.


இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் பார்ப்பதற்கு நடிகை நயன்தாரா போலவே உள்ளார் என சமீபகாலமாக ரசிகர்கள் கூறப்பட்டு வருகிறது.லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்த ரசிகர்கள் பலரும், அவரை பார்க்க நயன்தாரா போலவே தான் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.


அந்த நடிகை வேறு யாருமில்லை என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா தான் நடிகை நயன்தாரா போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..


Advertisement

Advertisement

Advertisement