• Apr 19 2024

விஷாலின் அண்ணியா இது...இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து  திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியவர்  ஸ்ரியா ரெட்டி. 

இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற  பல மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். அத்தோடு .இவர் நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார்.


ஏலேய் இசுக்கு என்று டயலாக் பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர்  சினிமாவில் இருந்து விலகி குழந்தையை பெற்று பார்த்து கொண்டார்.


மீண்டும் சினிமாவில் நடிக்க அண்டாவ காணோம் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.எனினும்  சமீபத்தில் கூட சுழல் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.



எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரியா ரெட்டி, தோழிகளுடன் இணைந்து கிளாமர் போட்டோஷூட் பார்ட்டி புகைப்படங்களை எப்போதும் பகிர்ந்து வருவார்.



உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஸ்ரியா ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டும் வருவார்.மேலும்  அப்படி சமீபத்தில் கடினமாக உழைத்த ஒர்க்கவுட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement