• Apr 28 2024

9வயது மூத்த நடிகையுடன் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகர்... அதுவும் இரவு நேரத்திலா..? இதில ரொமான்ஸ் வேற...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அர்ஜுன் கபூர். இவர் 'வலிமை' படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரின் மகன் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அர்ஜுன் கபூர் பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். 


நடிகை மலைக்கா அரோரா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'உயிரே' என்ற படத்தில் இடம்பெறும் "தைய தையா..." என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். பாலிவுட் சினிமாவை பொறுத்தவரையில் வயது வரம்பில்லாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்வது சகஜமாகிவிட்டது. 

அதில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருபவர் தான் அர்ஜுன் கபூர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக 48 வயதான நடிகை மலைக்கா அரோராவுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வருகிறார். இருவரும் இணைந்து அடிக்கடி அவுட்டிங் என்று சொல்லி ஜோடியாக வெளியில் சென்று வருகிறார்கள்.


அர்ஜுன் கபூரை விட கிட்டத்தட்ட 9 வயது மூத்தவராக இருக்கிறார் மலைக்கா. இந்நிலையில் பாலிவுட் பிரபலம் குணால் ராவல் என்பவரின் ப்ரீ வெட்டிங் பார்ட்டியில் அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா ஆகியோர் ஜோடியாக கலந்து கொண்டனர்.


அந்தப் பார்ட்டியில் சுமார் 24 வருடம் முன் வெளியான பாடலான "Chaiyya Chaiyya.." பாடலுக்கு இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்து ஆட்டம் போட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய நிலையில் பயங்கர வைரலாகியும் வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement