• May 13 2024

திருமணநாளை சிறப்பாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியினர்... வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த ஒருவரே நடிகர் சிவகார்த்திகேயன். இவர் திரையுலகில் பிரவேசிப்பதற்கு முன் விஜய் டீவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்திருந்தார். அதன் பின்னர் 'அது இது எது, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யமானார்.



இதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 'மெரினா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தின் பின்னர் இவர் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மனம் கொத்தி பறவை' ஆகிய படங்கள் பெரியளவில் வெற்றியை பெற்றன.

இவ்வாறாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனமையால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார் சிவகார்த்திகேயன். இவர் நடித்தால் படம் நிச்சயம் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு இன்றும் தன்னுடைய நகைச்சுவை கலந்த பாணியில் வரிசையாக பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.


தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு படம் ரூ.100 கோடி வசூல் ஈட்டுவது என்பது ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களால் மட்டுமே சாத்தியம் என்பதை உடைத்தெறிந்த பெருமையும் சிவகார்த்திகேயனையே சாரும். அந்தளவிற்கு நடிப்பில் கொடி கட்டிப் பறந்து வருகின்றார். இதேபோன்றே இவர் நடிப்பில் வெளியான 'டாக்டர், டான்' ஆகிய இரண்டு படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது.

இவ்வாறு வெற்றி நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே திருமணம் செய்துகொண்டார். அதாவது இவருக்கும் ஆர்த்திக்கும் 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் திகதி திருமணம் நடந்தது.  இத்தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும், குகன் தாஸ் என்கிற மகனும் உள்ளனர்.


இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது 12-ஆவது திருமணநாளை நேற்றைய தினம் கொண்டாடியுள்ளனர். அப்போது மனைவியுடன் ஜோடியாக இணைந்து நின்று போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார் நம்ம சிவகார்த்திகேயன். அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement