தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நகைச்சுவைத் தூண்களில் ஒருவரான வடிவேலு, தற்போது புகழ்பெற்ற இயக்குநர் சுந்தர்.சியுடன் இணைந்து நடித்துள்ள படம் தான் ‘கேங்கர்ஸ்’. இந்தப் படம் வெளியான முதல் நாளிலே ரசிகர்களை மட்டுமல்ல, பிரபலங்களையும் சிரிப்பில் ஆழ்த்தியிருந்தது.
‘கேங்கர்ஸ்’ திரைப்படம், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியில் உருவாகியிருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல வெற்றிப் படங்களை படைத்த இந்தக் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் வடிவேலு பன்முக வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பெண் வேடமிட்டு நடித்த சில காட்சிகள், டிரெய்லர் வெளியானபோதே இணையத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்த காட்சிகள் அவரது பழைய பொற்கால நகைச்சுவை பாணியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘கேங்கர்ஸ்’ பாடல்கள் மற்றும் டிரெய்லரை இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்காது. தற்போது 'தளபதி 69' படத்தில் பிஸியாக இருக்கின்ற நடிகர் சிம்பு, 'கேங்கர்ஸ்' படத்தை பார்த்த பிறகு, தனது X தளப்பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டுள்ளார்.
Listen News!