விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி மவுசு காணப்படுகின்றது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் இடம் பிடிக்க தவறுவதில்லை. அப்படி தவறிய சீரியல்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளுவதற்காகவே கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சன் டிவியில் மருமகள், மல்லி, மூன்று முடிச்சு போன்ற புது சீரியல் ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் சில சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து விட்டு புதிய சீரியல்களை ஒளிபரப்பாக்க சன் டிவி முயற்சி செய்து வருகின்றதாம்.
சன் டிவிக்கு டாப் கொடுக்கும் வகையில் விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி ஆன பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 4 சீரியல்களை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாம்.
அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த சீரியலில் ராமமூர்த்தியின் கேரக்டர் இறந்து விட்டதாக காட்டப்பட்டதிலிருந்து இதற்கு விரைவில் என்று கார்டு போட விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளது. ஆனாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதேபோல 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முத்தழகு சீரியல் 2 வருடங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது.
மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஆரம்பிக்கப்பட்ட பனி விழும் மலர்வனம் என்ற சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சுத்தமாக அவுட் ஆனதால் இதனையும் விரைவில் முடிப்பதற்கு விஜய் டிவி முடிவு செய்துள்ளது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடித்து வந்த வினுஷா மற்றும் ஷோபா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றார்கள். மேலும் சித்தாத் குமார் மற்றும் ராயன் ஹீரோவாக நடித்து வருகின்றார்கள்.
இறுதியாக விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் கை கொடுக்காததால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சீரியல் 100 எபிசோடுகளையே எட்டியுள்ள நிலையில் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!