தெலுங்கு சினிமாவின் தனித்துவமான நடிகரான அல்லரி நரேஷ் தற்பொழுது ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ‘12 A ரெயில்வே காலனி’ என்ற இப்படம் பரிசுத்தமான யுகாதி தினத்தில் புதிய போஸ்டருடன் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
‘12 A ரெயில்வே காலனி’ என்ற தலைப்பு படத்தின் சூழ்நிலையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ரெயில்வே காலனியில் நடைபெறும் மர்மமான சம்பவங்கள், அதனுடன் தொடர்புடைய பாத்திரங்கள் மற்றும் அந்த மர்மங்களைத் தீர்க்கும் தேடலின் கதையாகவே காணப்படுகின்றது.
இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகிய நானி காசர் புதுமுகம் என்றாலும், திரைக்கதை வடிவமைப்பு மற்றும் புதுமையான காட்சி அமைப்புகளில் வித்தியாசம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்’ நிறுவனம் இப்படத்தை உருவாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கின்ற நிலையில் மே மாதத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு புத்தாண்டான 'யுகாதி' தினத்தை முன்னிட்டு, படக்குழு இன்று ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
Listen News!