• Jan 08 2026

குழந்தை விவகாரம் பகிரங்க மன்னிப்பு கோரினார் யூ டியூபர் இர்பான்

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டின் பிரபல யூ டியூபர்களில் முதன்மையானவர் இர்பான்.புட் வுளொக் சானல் ஆக ஆரம்பிக்கப்பட்ட இவரது இர்பான் வியூஸ் சானல் தொடர்ந்து ஓர் டெய்லி வுளொக் சானலாகவே மாறியது.இன்றைய நிலைக்கு கிட்டத்தட்ட  4.5 மில்லியன் போல்லோவர்களை கொண்டு தொடர்ந்து இயங்கி வருகிறது இவருடைய சானல்.


இந்நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது அவரின் மனைவி ஆலியா கர்ப்பமாக இருக்கும்நிலையில், தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை அறிவித்து அந்தக் கொண்டாட்டத்தையே வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார்.


கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது இந்தியாவில் சட்டத்தின்படி கடுமையான குற்றமாகும். இது குறித்து சுகாதாரத்துறை இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பகிரங்கமாக வீடியோ ஒன்றின் மூலம் மன்னிப்பு கோரினார்.

Advertisement

Advertisement