• Dec 03 2024

உங்க காம்பினேஷன் ரொம்ப தப்பா இருக்கு.. ஓடுகாளி பிரதர்ஸின் மூக்குடைத்த முத்து! எல்லாருக்கும் ஹார்ட் கொடுத்த ஸ்ருதி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், மலேசிய மாமா காய்கறிகளை வெட்டி தள்ள, இப்படியே விட்டா மாட்டிடுவோம் என்று மாமா நீங்க சுடு தண்ணி கேட்டீங்க ரூம்ல வச்சிருக்கேன் வாங்க என்று ரோகிணி அவரை ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.

இவ்வாறு உள்ளே போனதும் ஓவர் ஆக்டிங் எதுக்கு பண்ணிக்கிட்டு இருக்கீங்க இதெல்லாம் உங்களை யார் பண்ண சொல்றது என ரோகிணி கோவப்படுகிறார். நான் சொல்ற வரைக்கும் நீங்க ரூம்ம விட்டு வரவே கூடாது படுத்து தூங்குங்க ஏதாவது பண்ணீங்கன்னா நானே உங்கள துரத்தி விட்டுருவேன். பிறகு படத்துல நடிக்க வாய்ப்பு எல்லாம் கிடைக்காது என மிரட்டுகிறார். 


மறுபக்கம் மலேசியா மாமா பற்றி முத்து நடந்து கொண்ட யோசிக்க, எதுக்கு இப்ப குட்டி போட்ட பூனை மாதிரி நடக்கிற என செல்வம் கேட்கிறார்.  அவரைப் பார்த்தா மலேசியா மாமா மாதிரியே தெரியல மந்தவெளியால் மாதிரி இருக்குது. என்னவோ தப்பா இருக்குன்னு முத்து சொல்ல, சரக்கு கேளு மலேசியா சரக்கு இல்லன்னா தெரிஞ்சிடும் அந்த ஆளு எந்த ஊரு என்று தெரியவரும் என ஐடியா கொடுக்கிறார் செல்வம்.


இதைத் தொடர்ந்து, மருமகள்கள் மூவரும் தனித்தனியாக பொங்கல் வைக்கின்றார்கள். அப்போது முத்து பாட்டியை கொஞ்ச, அண்ணாமலை நீங்க வளர்த்த பையன் தானே அதான் உங்க கூட பாசமா இருக்கிறான் அப்படி என்று அண்ணாமலை சொல்ல, நீ  அண்ணாமலை போல தான் கள்ளம் கபடம்  இல்லாம இருக்கா அப்படின்னு பாட்டி சொல்கிறார். 


அப்போது, அப்ப நாங்க ரெண்டு பேரும் கள்ளம் கபடம் கொண்ட வளர்ந்தோம் என்று மனோஜ் கேட்க, ஆமா நீங்க தான் ஓடுகாளி பிரதர்ஸ் அப்படி என்று முத்து சொல்கிறார். விஜயாவும் ஒரு மாதிரி முகம் சுளிக்கிறார்.


இதை அடுத்து, உங்க மாமாவை கூட்டிட்டு வா என விஜயா ரோகிணிக்கு சொல்ல, அவருக்கு பொங்கல் வைத்து எப்படி இருக்குன்னு கேக்க. இரத்த பொரியல் மாதிரியே சாப்ட்டா இருக்கு மட்டன் சுக்கா இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும் என்று மலேசியா மாமா சொல்ல, எல்லாரும் தப்பான காம்பினேஷனா இருக்கு என்று யோசிக்கிறார்கள்.


இடையில் புகுந்த ரோகிணி அவர் இப்படி தான் ஜோக் பண்ணிட்டு இருப்பாரு  என மறுபடியும் சமாளிக்கிறார். எல்லாரும் ஒன்றாய் இருக்க பாட்டி எல்லாரையும் போட்டோ எடுக்க ரொம்ப ஆசைப்பட்டு, எல்லாரையும் வெளியில் கூட்டி வருகிறார். 


அதன்படி எல்லாரும் குடும்பத்தோடு உட்கார்ந்து, சந்தோஷமாக போட்டோ எடுத்துக் கொள்கின்றார்கள். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement