• Mar 19 2026

ஷங்கரின் 'வேள்பாரி’ வாய்ப்பிற்கு NO சொன்ன தனுஷ்.. காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீர்கள்

shali / 2 days ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ளதாக பேசப்பட்ட ‘வேள்பாரி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக முன்பு பரவலாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள ‘வேள்பாரி’ கதையை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பல முன்னணி நடிகர்கள் இதில் நடிக்க உள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் வெளிவந்தன. 


குறிப்பாக, வேள்பாரி கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது அந்த எதிர்பார்ப்புக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனுஷ் தற்போது மிகவும் பிஸியான அட்டவணையில் இருப்பதாகவும், அடுத்தடுத்த பல திரைப்படங்களில் அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறிப்பாக, அவர் கைவசம் தற்போது 8 படங்கள் வரை இருப்பதாகவும், அவற்றின் படப்பிடிப்புகள் மற்றும் வெளியீடுகள் காரணமாக அடுத்த மூன்று ஆண்டுகள் முழுவதும் அவர் தொடர்ந்து பிஸியாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலைமையில், ‘வேள்பாரி’ போன்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் வரலாற்றுப் படம் ஒன்றுக்கு நீண்ட கால தேதிகள் ஒதுக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட திட்டத்திற்கு தேவையான நேரத்தை ஒதுக்க முடியாத காரணத்தினால் தான் தனுஷ் இந்த வாய்ப்பை தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement