• May 31 2026

ஹாரர் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. 'டிமான்ட்டி காலனி 3' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் படுவைரல்

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்ட்டி காலனி - 3’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் தனித்துவமான முத்திரையை பதித்த இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாம் பாகம் மேலும் பரபரப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.


‘டிமான்ட்டி காலனி’ முதல் பாகம் வெளியான போது, அதன் புதுமையான கதை அமைப்பும், பயமூட்டும் காட்சிகளும், வித்தியாசமான திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்தன. அதன் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகமும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, கதையின் மர்மத்தை மேலும் விரிவுபடுத்தியது. இதனால், இந்த தொடரின் மூன்றாவது பாகம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இயல்பாகவே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘டிமான்ட்டி காலனி - 3’ படக்குழு தற்போது ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான “தி லைப்ரேரியன்” (The Librarian) கதாபாத்திரத்தை நடிகர் குரு சோமசுந்தரம் ஏற்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement