• May 19 2024

அதிபுத்திசாலி பேச்சை கேட்க கூடாது- மகளை கலாய்த்து தள்ளிய ரஜினிகாந்த்- அதுவும் என்ன படத்திற்கு தெரியுமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில்  மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்னும் ரோலில் நடித்து வருகின்றார்.இப்படத்திற்காக ரஜினிகாந்த் ரூ. 100 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.


அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு காலா படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் எந்திரன் படத்தை அடுத்து உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் படங்களில் நடிக்க ஆசை வந்தது.

என் மகள் அதிபுத்திசாலி, அவர் என்னிடம் அனிமேஷன் படத்தில் நடிக்கலாம் என்று ஆலோசனை கொடுத்தார். அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை. படத்தில் தரம் நன்றாக இருக்கும் வேண்டும் என்றால் அதிக அளவில் பணம் செலவாகும் என்று சொன்னார்கள். 


எனக்கு கோச்சடையான் படம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் எடுத்த வரை போதும் அப்படியே ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டேன்.நான் நினைத்த படி படம் சரியாக போகவில்லை. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதிபுத்திசாலி பேச்சை கேட்க கூடாதது, அவர்களுடன் பழக கூடாது என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.இவரின் வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement