• Sep 30 2023

செல்லம்மா கழுத்தில் தாலி கட்டியது மாணிக்கமா? சித்துவா?- செல்லம்மா சீரியலில் நடக்க இருக்கும் டுவிஸ்ட- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி. இந்த சேனலானது 20 வருடங்களுக்கும் மேலாக தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும், விறுவிறுப்பான தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.

அவ்வாறான தொடர்களில் ஒன்று தான் 'செல்லம்மா'. மற்ற சீரியல்களைப் போலவே இந்த சீரியலும் விறுவிறுப்பாக நகர்ந்தவாறு இருக்கின்றது. இதில் லக்ஷ்மிக்கும் மகேந்திரனுக்கும் செல்லம்மா தான் தன்னுடைய மகள் என்ற விஷயம் தெரிந்து விட்டது.


இது ஒரு புறம் இருக்க செல்லம்மாவை அவரது முதல் கணவரான மாணிக்கம் கடத்திக் கொண்டு போய் வைத்திருக்கின்றார். இதனால் மகேந்திரனும் சித்தார்த்தும் செல்லம்மாவையும் மலரையும் தேடித் திரிகின்றனர்.

இப்படியான நிலையில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது செல்லம்மாவின் கழுத்தில் மாணிக்கம் தாலி கட்டுகின்றார். இதனால் அடுத்து கல்யாண சீன் நடக்கப்போகின்ற என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணிக்கம் தாலி கட்டுவாரா அல்லது சித்து வந்து செல்லம்மாவின் திருமணத்தை நிறுத்துவாரா என்ற விபரம் இனி வரும் நாட்களில் தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement