• Nov 13 2025

மதுபான சந்தையில் சாதனை படைக்க ரெடியாகும் அஜய் தேவ்கன்.! வெளியான தகவல்கள் இதோ.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரை உலகில் பரபரப்பான நடிப்பால் அதிகளவான ரசிகர்களை தன்வசமாக்கியுள்ளார் அஜய் தேவ்கன். நடிப்பிலும், தயாரிப்பிலும் தனக்கென ஒரு தனிச்சிறப்பை நிலைநிறுத்திய இவர், தற்போது தனது வணிக யுக்திகளை பயன்படுத்தி மதுபான தயாரிப்பு துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.


"Glen Journeys" என்ற பெயரில் விஸ்கி வகையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாக இதனைப் பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்தியாவில் மதுபானம் என்பது ஒரு வளர்ந்து வரும் பில்லியன் டாலர் மார்க்கெட் கொண்ட வியாபாரமாகும். இதனை துல்லியமாக புரிந்து கொண்ட அஜய் தேவ்கன், Glen Journeys மூலம் இந்திய மதுபான சந்தையில் 20% பங்கை பிடிக்க விரும்புவதாகத் திட்டமிட்டுள்ளார்.


இந்த பங்கு பெறும் நோக்கம் சிறிய விஷயம் அல்ல. ஆனால், அவரது ஸ்டார் பவர், மார்க்கெட் அறிவு, மற்றும் உயர்தர தயாரிப்பு ஆகிய மூன்றும் இணைந்தால், இந்த இலக்கை அடைய முடியும் என சந்தை வல்லுநர்களும் நம்பிக்கை செலுத்துகின்றனர். மேலும் அஜய் தேவ்கனின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement