• Sep 20 2024

விக்கி - நயன் திருமணத்தில் விஜய்யுடன் இத்தனை பிரபலங்களா..லீக்கான புகைப்படங்கள்-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி 7 வருடங்கள் கடந்த நிலையில் இன்று திருமணம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இன்று ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

மேலும் மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியுடன் இவர்களது திருமண நிகழ்ச்சி துவங்கியது. திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் விதவிதமாக புகைப்படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி செம டிரெண்டாகின.

திருமணத்தில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது. சூப்பர்ஸ்டார், கலா மாஸ்டர், ஷாருக் கான், அட்லீ, போனி கபூர், கார்த்தி மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தளபதி 66 படத்திற்காக ஹைதராபாத்தில் பிசியாக ஷூட்டிங்கில் இருந்தாலும், நடிகை நயன்தாராவின் அழைப்பை ஏற்று நயன் விக்கி திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த உடன் உடனடியாக ஹைதராபாத்திற்கு விஜய் புறப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் நடிகர் விஜய்யும் திருமணத்தில் பங்கேற்றுள்ள பிரத்யேக வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. நீல நிற சட்டை அணிந்து செம ஸ்மார்ட்டாக நடிகர் விஜய் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement