• May 18 2024

பச்சை நிற ஆடையில் கவர்ச்சிப் போஸ் கொடுத்த நடிகை நஸ்ரியா - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்டு வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை நஸ்ரியா நசீம். "ராஜா ராணி, நேரம், நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ், வாயை மூடி பேசவும்" போன்ற படங்களின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானவர். எனினும் இதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்து கேரளா முழுவதும் அறியப்பட்டவர்.

நடிகை நஸ்ரியா நசீம் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருப்பினும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம். தனது அழகினாலும் குழந்தைத் தனமான நடிப்பினாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் அதிகளவான படங்களில் நடித்திருக்கின்றார். அது மட்டுமல்லாது அண்மையில் தெலுங்கில் நானியுடன் இணைந்து Ante Sundaraniki என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஃபகத் பாசிலை 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. எனினும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நஸ்ரியா அவ்வப்போது போட்டோஷூட் செய்து அதனை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். அதேபோன்று இம்முறையும் பிரபல போட்டோ கிராபர் அட்ரின் செகுரியா உடன் இணைந்து நடாத்திய போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இப்புகைப்படங்கள் கடந்த ஜூன் 10-ஆம் திகதி Ante Sundaraniki என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement