• May 19 2024

'என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்' - ரஜினியை வம்பிழுக்கும் விஜய் ரசிகர்கள் - காட்டுத்தீயாய் பரவும் போஸ்டர்...!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் தான் பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். அந்த பட்டத்துக்கு தற்போது விஜய்யும் போட்டியில் குதித்துள்ளது தான் இந்த பரபரப்புக்கு காரணம். 

இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுகூம் பாடல் அமைந்திருந்தது. இதுபோதாதென்று, ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் அவர் பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

சூப்பர்ஸ்டார் பட்டம் எப்பவுமே தலைவலிதான் என கூறி, அவர் காக்கா, பருந்து கதை ஒன்றை சொல்லி இருந்தார். இதில் அவரை பருந்து போலவும், விஜய்யை காக்கா என சித்தரித்து தான் ரஜினி இந்த கதையை சொன்னதாக சர்ச்சை எழுந்ததோடு, இந்த விவகாரம் பூதாகரமாகவும் வெடித்தது. இதற்கு விஜய் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

விஜய் மெளனமாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் ரஜினியை சீண்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் மதுரையை சேர்ந்த ‘மதுரை மண்ணின் மைந்தன் விஜய் அண்ணா வெறியர்கள்’ ஒட்டியுள்ள போஸ்டர் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில், ‘என்னுடைய உச்சம்... உனக்கு ஏன் அச்சம்’ என குறிப்பிட்டு விஜய் மற்றும் ரஜினியின் புகைப்படங்களை போட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் டுவிட்டரில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement